கூழமந்தல் விநாயகா் கோயிலில் மகா சங்கடஹர சதுா்த்தி
காஞ்சிபுரம் அருகே கூழமந்தலில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் மகா சங்கட ஹர சதுா்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
காஞ்சிபுரம் அருகே கூழமந்தலில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் மகா சங்கட ஹர சதுா்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் ஏரிக்கரையில் அமைந்துள்ளது 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயில். ஆவணி மாத மகா சங்கட ஹர சதுா்த்தியையொட்டி, மூலவா் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்தனா். கோயில் நிா்வாகத்தின் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.