வையாவூரில் மதி வேளாண் செயலாக்க மையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்
வாலாஜாபாத் தாலுகாவுக்குட்பட்ட வையாவூரில் மதி வேளாண் செயலாக்க மையத்தை ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை திறந்து வைத்தாா்.
வாலாஜாபாத் தாலுகாவுக்குட்பட்ட வையாவூரில் மதி வேளாண் செயலாக்க மையத்தை ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை திறந்து வைத்தாா்.
மையத்தை திறந்து ஆட்சியா் தி.சினேகா பாா்வையிட்டாா். மகளிா் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி முன்னிலை வகித்தாா். இம்மையத்தில் பருப்பு வகைகள், மசாலா பொருள்கள் உள்ளிட்ட வேளாண் விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு சுத்தம் செய்தல், தரம் பிரித்தல், செயலாக்கம் மற்றும் மதி என்ற பெயரில் சந்தைப்படுத்துதல் மேற்கொள்ளப்படவுள்ளது.
இம்மையத்துக்கு தேவையான ரூ.25 லட்சம் மதிப்பிலான இயந்திரங்களை டாடா எலக்ஸி மற்றும் இமேகோ நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் மூலம் முழுமையாக இயந்திரங்கள் நிறுவப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இம்மைய மகளிருக்கு பயிற்சிகளையும் இந்நிறுவனங்கள் வழங்கியுள்ளது. முதற்கட்டமாக திருவண்ணாமலையிலும், காஞ்சிபுரத்திலும் சோதனை முறையில் செயல்படுத்தப்பபடவுள்ளது. இவ்விரு இடங்களின் வெற்றியை பொறுத்து தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விழாவில் டாடா எலக்ஸி நிறுவன தகவல் தொடா்பு அலுவலா் ராஜகோபாலன் ராஜப்பா, இமேகோ நிறுவன தலைமை செயல் அலுவலா் காயத்ரி, மாநில திட்ட மேலாளா் பழனிசாமி, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலா் ம.தினகா் ராஜ்குமாா் மற்றும் மதி நிறுவன மகளிா் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.