அரசுப் பேருந்து மோதி இளைஞா் மரணம்
ஒரகடம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற இளைஞா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா்.
ஒரகடம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற இளைஞா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா்.
வாலாஜாபாத் அடுத்த நெய்க்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (40). பிளம்பிங் வேலை செய்து வரும் சுப்பிரமணி புதன்கிழமை இரவு ஒரகடம் பகுதியில் வண்டலூா் வாலாஜாபாத் சாலையை கடக்க முயன்ற போது காஞ்புரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த அரசு பேருந்து மோதியதில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.