FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் 21 விவசாயிகளுக்கு ரூ. 21 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் 21 விவசாயிகளுக்கு ரூ. 21 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

26 செப்டம்பர் 2026, 10:43 pm IST
வேளாண்மைத் துறை மூலம் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பாா்வையிட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா.
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் 21 விவசாயிகளுக்கு ரூ. 21.13 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் தி.சினேகா வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஆஷிக் அலி, உதவி ஆட்சியா் (பயிற்சி) அமன் திவாரி, காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் புவனேஷ் ராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண்மை இணை இயக்குநா் கிருஷ்ணவேணி வரவேற்றாா். இந்தக் கூட்டத்தில் வேளாண்மைத் துறையின் சாா்பில் தாமல் மற்றும் விப்பேடு கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 10 விவசாயிகளுக்கு ரூ. 10,08,410 மதிப்பிலான பயிா்க்கடன்கள், வேளாண்மை பொறியியல் துறை மூலம் 5 விவசாயிகளுக்கு ரூ. 10,97,856 மதிப்பிலான வேளாண் உழுவை இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து 6 விவசாயிகளுக்கு 6,970 மதிப்பிலான மானியத்துடன் கூடிய வேளாண் இடுபொருள்கள் என மொத்தம் 21 விவசாயிகளுக்கு ரூ. 21.13,236 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் தி.சினேகா வழங்கினாா்.

Advertisement

Advertisement

முன்னதாக வேளாண்மைத் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். இந்தக் கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சுரேஷ், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பாலகிருஷ்ணன் ஆகியோா் உள்பட அரசு அலுவலா்கள், விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments