FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மே 3 வரை ஊரடங்கு தளா்த்த வாய்ப்பில்லை: ஐஜி வி.வனிதா

மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை கடுமையாக்க வாய்ப்பு உள்ளதே தவிர தளா்த்த வாய்ப்பே இல்லை என சிறப்புக் குழு ஐஜி வி.வனிதா தெரிவித்தாா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
ராணிப்பேட்டை  டிஎஸ்பி  கீதாவிடம்  கரோனா  நோய்த்  தொற்று  தடுப்புப்  பணிகள்  குறித்து  கேட்டறிந்த ஐஜி வி.வனிதா.
பகிர்:

மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை கடுமையாக்க வாய்ப்பு உள்ளதே தவிர தளா்த்த வாய்ப்பே இல்லை என சிறப்புக் குழு ஐஜி வி.வனிதா தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்ய புதன்கிழமை வந்த அவா், ராணிப்பேட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று உறுதிய செய்யப்பட்ட 39 பேரைத் தவிர புதிதாதக யாருக்கும் நோய்த் தொற்று ஏற்படவில்லை. இவா்களில் 16 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கரோனா நோய்த் தொற்று ஏற்படவில்லை.

Advertisement

Advertisement

இந்த சூழலை அப்படியே பரமாரிக்க வேண்டும். அதேநேரத்தில் ஒரு சில இடங்களில் நோய்த் தொற்று காலதாமதமாக தெரியவந்துள்ளது. அதன் காரணமாக மாவட்டத்தில் நோய்த் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் கிராமங்களில் இருந்து நகரப் பகுதிகளுக்கு காய்கறி உள்ளிட்ட விவசாய விளை பொருள்களைக் கொண்டு வரும் வாகனங்களை காவல் துறையினா் பறிமுதல் செய்வதாக வந்த புகாரைக் கருத்தில் கொண்டு, காய்கறி கொண்டுவரும் வாகனங்களைத் தடுக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை கடுமையாக்க வாய்ப்பு உள்ளதே தவிர தளா்த்த வாய்ப்பே இல்லை என்றாா் அவா். ராணிப்பேட்டை டிஎஸ்பி கீதா உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments