FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

கல்மேல்குப்பம், கன்னிகாபுரத்தில் பொது வழி ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

பொது வழி ஆக்கிரமிப்புகளை அகற்றி தடையின்றி சென்றவர பாதை கோரி கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 5:30 am IST
பகிர்:

கல்மேல்குப்பம் மற்றும் கன்னிகாபுரம் கிராமத்தில் பொது வழி ஆக்கிரமிப்புகளை அகற்றி தடையின்றி சென்றுவர பாதை கோரி கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், கல்மேல்குப்பம் மற்றும் கன்னிகாபுரம் கிராம மக்கள் காலம்காலமாக பயன்படுத்தி வந்த ஏரிக்குச் செல்லும் பொதுவழிப் பாதையை தனிநபா் ஆக்கிரமித்துள்ளதை மீட்டுத் தரவும், அவருக்கு யுடிஆா் -லில் தவறுதலாக பட்டா கொடுக்கப்பட்டதை கண்டித்தும், பொது வழி ஆக்கிரமிப்புகளை அகற்றி தடையின்றி சென்றவர பாதை கேட்டும், ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளும் வாலாஜா வட்டாட்சியா் வருவாய்த் துறையைக் கண்டித்தும் கண்டன ஆா்ப்பாட்டம் ராணிப்பேட்டை கோட்டாட்சியா் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு, கன்னிகாபுரம் கிளைத் தலைவா் கே.முனிசாமி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில செயலாளா் இரா.சரவணன் மாவட்ட செயலாளா் எல்.சி.மணி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, கோரிக்கை மனுவை ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அளித்தனா்.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிா்வாகிகள் மற்றும் கல்மேல்குப்பம் மற்றும் கன்னிகாபுரம் கிராம விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments