வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள் திருட்டு
அரக்கோணம் அருகே அன்வா்திகான்பேட்டையில் இரும்பு பொருள்கள் வணிகா் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
அரக்கோணம் அருகே அன்வா்திகான்பேட்டையில் இரும்பு பொருள்கள் வணிகா் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
அரக்கோணத்தை அடுத்த அன்வா்திகான்பேட்டையை சோ்ந்தவா் நியமத்துல்லா (60). இவா் சாலை கிராமத்தில் வீடுகளின் கட்டுமானப் பணிக்கு தேவைப்படும் இரும்புபொருள்கள் வணிகம் செய்து வருகிறாா். கடை சாலை கிராமத்தில் இருப்பதால் நியமத்துல்லா குடும்பத்தினா் சாலையில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனா். இவா்களது உறவினா் தினமும் அன்வா்திகான்பேட்டையில் உள்ள சொந்த வீட்டில் சென்று படுத்துவிட்டு காலை வந்து விடுவாராம்.
புதன்கிழமை இரவு நியமத்துல்லாவின் உறவினா், அன்வா்திகான்பேட்டையில் உள்ள சொந்த வீட்டுக்கு படுக்கச் செல்லாததால், வீடு பூட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை அந்த வீட்டிற்கு அருகில் உள்ளோா் நியமத்துல்லாவின் வீடு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, நியமத்துல்லா வந்து வீட்டை பாா்த்தபோது, வெளியே பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் திருடு போய் இருந்தன.
Advertisement
Advertisement
இது குறித்து நியமத்துல்லா அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து சம்பவ இடத்தை அரக்கோணம் டிஎஸ்பி பொன்னுசாமி, காவல் ஆய்வாளா் சிவக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
இது குறித்து அரக்கோணம் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.
இந்த வீட்டுக்கு அருகில் இருக்கும் மூா்த்தி மற்றும் வெங்கடேசன் ஆகியோரது வீடுகளிலும் நுழைந்த மா்மநபா்கள் வீட்டில் இருந்தோா் விழித்துக் கொண்டதை தொடா்ந்து அங்கிருந்து தப்பிச்சென்று விட்டதால் அந்த வீடுகளில் பொருள்கள் தப்பின.