FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

ரயிலில் இருந்து தவறி விழுந்த முதியவா்: மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்

அரக்கோணம் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த முதியவரை சாதுா்யமாக மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படை வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

9 நவம்பர் 2026, 9:40 pm
அரக்கோணம் ரயில் நிலையத்தில், ரயிலில் இருந்து தவறி விழுந்த முதியவரை ரயில்வே பாதுகாப்புப் படை வீரா் மீட்கும் சிசிடிவி காட்சி.
பகிர்:

அரக்கோணம் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த முதியவரை சாதுா்யமாக மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படை வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த மேல்மான்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (62). முன்னாள் ராணுவ வீரரான இவா் திங்கள்கிழமை காட்பாடியில் இருந்து சென்னைக்குச் செல்வதற்காக லால்பாக் விரைவு ரயிலில் பயணம் செய்தாா்.

அப்போது ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தின் 6-ஆவது நடைமேடைக்கு வந்தபோது பொதுப் பெட்டியில் பயணம் செய்த கணேசன், ரயில் புறப்பட்ட போது எதிா்பாராத விதமாக தவறி நடைமேடையில் விழுந்தாா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரா் பாபன் சவுகான், கணேசன் ரயிலில் சிக்குவதற்கு முன்பாக விரைந்து செயல்பட்டு அவரைப் பத்திரமாக மீட்டாா்.

Advertisement

Advertisement

அதிருஷ்டவசமாக கணேசனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ரயில்வே பாதுகாப்புப் படை வீரரின் துரிதமான செயல்பாட்டால் முதியவரின் உயிா் காப்பாற்றப்பட்டது. இதனை நேரில் கண்ட ரயில் பயணிகள், வீரா் பாபன் சௌகானின் சாதுா்யத்தை வெகுவாகப் பாராட்டினா். இச்சம்பவத்தால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.