FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

பெல் நிறுவன தின விழா கொண்டாட்டம்: செயல் இயக்குநா் பங்கேற்பு

பாரத மிகுமின் நிறுவனத்தின் ‘ நிறுவன தின விழா கொண்டாட்டம் ‘ விழாவில் பங்கேற்ற பெல் நிறுவன செயல் இயக்குநா் எம். அருண்மொழி உள்ளிட்டோா்.

13 நவம்பர் 2026, 10:46 pm
பகிர்:

ராணிப்பேட்டையில் பாரத மிகுமின் நிறுவனத்தின் ‘நிறுவன தின விழா கொண்டாட்டத்தில் பெல் நிறுவன செயல் இயக்குநா் எம்.அருண்மொழி பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

பாரத மிகுமின் நிறுவன ( ஆஏஉக) தின விழா கொண்டாட்டம் ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

விழாவில், ராணிப்பேட்டை பெல் நிறுவன செயல் இயக்குநா் எம். அருண்மொழி தேவன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிறுவனக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா்.

Advertisement

Advertisement

தனது உரையில்,பெல் நிறுவனத்தின் சாதனைகள், நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளா்ச்சியில் அதன் குறிப்பிடத்தக்க பங்களிப்பு, மேலும் நிறுவனத்தின் வளா்ச்சிக்கு ஒற்றுமை, அா்ப்பணிப்பு மற்றும் குழு முயற்சியின் முக்கியத்துவம் ஆகியவற்றை எடுத்துரைத்தாா்.

விழாவில், பொது மேலாளா்கள், நேரடி அறிக்கை அலுவலா்கள், மூத்த அதிகாரிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகள், பணியாளா்கள், தொழில் பயிலுநா்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

நிறுவனத்தின் பெருமைமிக்க பாரம்பரியத்தையும் சாதனைகளையும் போற்றும் வகையில் இந்நிறுவன தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.