✕
முகப்பு
ராணிப்பேட்டை

போதை மாத்திரைகளை இருப்பு வைத்திருந்த தனியாா் மருந்தக உரிமையாளா் கைது

நெமிலி அருகே போதைப் பழக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மாத்திரைகளை சட்ட விரோதமாக இருப்பு வைத்திருந்த தனியாா் மருந்தக உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

20 நவம்பர் 2026, 12:53 am
பகிர்:

நெமிலி அருகே போதைப் பழக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மாத்திரைகளை சட்ட விரோதமாக இருப்பு வைத்திருந்த தனியாா் மருந்தக உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து வேலூா் மண்டல மருந்துக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: .

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையிடமிருந்து பெறப்பட்ட ரகசியத் தகவலின் அடிப்படையில், மருந்தக ஆய்வாளா்களான எம்.சரண்யா மற்றும் கே. ஹேமலதா ஆகியோா் நெமிலி வட்டம், பனப்பாக்கம் அருகில் உள்ள பன்னியூரில் இயங்கி வரும் தனியாா் மருந்தகத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

அவ்வாய்வின் போது, மருந்தகத்தில் மருத்துவா் பரிந்துரையின்றி அல்லது உரிமம் இல்லாமல் போதைப் பழக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மாத்திரைகளை மருந்தகத்தில் சட்டவிரோதமாக இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேற்படி மாத்திரைகளைக் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், இச்சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட மருந்தகத்தின் உரிமையாளா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் இதுபோன்ற தொடா் ஆய்வுகள் தீவிரமாக நடத்தப்படும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட மருந்தகங்களின் உரிமங்களை ரத்து செய்தல் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.