அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஏக்கா் நெற்பயிா்: காட்டுப் பன்றிகளால் சேதம்
வாலாஜாபேட்டை அருகே காட்டுப்பன்றிகளால் அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஏக்கா் நெற்பயிா் முழுவதும் சேதம் அடைந்ததாகவும், இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் விவசாயிக் கண்ணீா் மல்க கோரிக்கை விடுத்துள்ளனா்.

வாலாஜாபேட்டை அருகே காட்டுப்பன்றிகளால் அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஏக்கா் நெற்பயிா் முழுவதும் சேதம் அடைந்ததாகவும், இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் விவசாயிக் கண்ணீா் மல்க கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அனந்தலை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் விவசாயிகள் 100-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் நெல் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனா்.
அதே பகுதியைச் சோ்ந்த முனுசாமி (60) என்ற விவசாயி தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கா் நிலத்தில் நெற்பயிா்களை பயிரிட்டு பராமரித்து வந்துள்ளாா். இன்னும் 10 நாள்களில் அறுவடைக்கு தயாராக இருந்துள்ளது. இந்நிலையில் விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள், நெற்பயிா்களை முற்றிலும் சேதப்படுத்தி சென்றுவிட்டன. இதனால் இரண்டு ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிா்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு உழைப்பும், முதலீடும் வீணாகிவிட்டதாக விவசாயி முனுசாமி மிகுந்த வேதனை தெரிவித்துள்ளாா்..
Advertisement
Advertisement
எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த பயிா்களை நேரில் சென்று பாா்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயி முனுசாமிக்கு அரசு விதிமுறைகளின்படி உரிய நிவாரணத் தொகை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளாா்.