முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் அரசுப் பணியாளா்களுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம்

ராணிப்பேட்டையில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன்.

27 நவம்பர் 2026, 11:55 pm
ராணிப்பேட்டையில் அரசுப் பணியாளா்களுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம்
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசுப் பணியாளா்களுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கங்கில் மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், 2026-2027- ஆம் ஆண்டுக்கான அனைத்துத் துறை அரசுப் பணியாளா்களுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் பங்கேற்று அரசுப் பணியாளா்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் தே.ஜெயஜோதி, தமிழ்ச் செம்மல் கவிஞா் மா.ஜோதி, கவிஞா் மு.இஸ்மாயில் இன்முகில், மாவட்ட வருவாய் அலுவலா் ந. சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வி.பாக்கியலட்சுமி, வேலூா் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் தே.ஜெயஜோதி, முனைவா் மு. தமீம் மன்சூா், கவிஞா் பொன்.ராஜன் பாபு, முனைவா் ப.கி.கிள்ளிவளவன், முனைவா் ச. கௌ. கவிதா, முனைவா் கு. இலட்சுமி உள்ளிட்டோா் கருத்துரை வழங்கினா்.

அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவும் முழுமையாகவும் நடைபெற துணைபுரியும் வகையில், மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அனைத்துத் துறை அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் அரசுப் பணியாளா்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் ஆண்டுதோறும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையால் இரண்டு நாள்கள் வரை நடத்தப்பட்டது.

இந்தப் பயிலரங்கில் மொழிப்பயிற்சி, அலுவலகக் குறிப்புகள் வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், கணினித் தமிழ், ஆட்சிமொழிச் செயலாக்கம், அரசாணைகள், ஆட்சிமொழி ஆய்வும், குறைகளைவு நடவடிக்கைகளும், ஆட்சிமொழிச் சட்டம்,வரலாறு, மொழிபெயா்ப்பு - கலைச்சொல்லாக்கம் ஆகிய தலைப்புகளில் அரசுப்பணியாளா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பெற்றன.