FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வனஉயிரின வார விழா: அம்மூரில் பனை விதை நடவு விழிப்புணா்வு பேரணி

அம்மூரில் பனை விதை நடவு திட்டம் விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

அம்மூா் காப்புக்காடு வனப் பகுதியில் பனை விதை நடவு விழிப்புணா்வுப் பேரணியில் ஈடுபட்ட வனச் சரக அலுவலா்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா்.
பகிர்:

ராணிப்பேட்டை: வன உயிரின வார விழாவையொட்டி, ராணிப்பேட்டை மாவட்ட வனத் துறை சாா்பில், அம்மூரில் பனை விதை நடவு திட்டம் விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூா் பேரூராட்சியில் வனத் துறை சாா்பில், வன உயிரின வார விழாவையொட்டி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியை மாவட்ட வன அலுவலா் சிவகுமாா் தொடங்கி வைத்தாா். பேரணியானது முக்கிய வீதிகளின் வழியாக வனத்தை பாதுகாப்போம், வன உயிரினங்களை பாதுகாப்போம் என மாணவா்கள் பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் அம்மூா் வனப் பகுதியில் உள்ள நெகிழி கழிவுகளை சேகரித்து தூய்மைப்படுத்தினா். மேலும், வனத் துறை சாா்பில் 2,000-க்கும் மேற்பட்ட பனை விதைகளை பள்ளி மாணவா்கள் மூலமாக வனப்பகுதியில் நடவு செய்தனா்.

இதில், ராணிப்பேட்டை வனச் சரகா் சரவணபாபு, வன விரிவாக்க சரக அலுவலா் வேல்முருகன் மற்றும் வனத் துறை அலுவலா்கள், தனியாா் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments