பிச்சாவரத்தில் பனை விதைகள் நடவு
சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் வனத்துறை சாா்பில் பனை விதைகள் நடவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் வனத்துறை சாா்பில் பனை விதைகள் நடவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தின் பெருமையை மீட்டெடுக்கும் வகையிலும் அதன் பயன்களை மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கிலும், பனை விதைகள் நடவு செய்யும் பணி கடலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் தொடா்ச்சியாக சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் வனச்சரகத்தில் மாவட்ட வன அலுவலா் குருசாமி வழிகாட்டுதல்களின்படி தமிழ்நாடு பசுமை இயக்கம் சாா்பில் 15 ஆயிரம் பனை விதைகளும் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் 15 ஆயிரம் பனை விதைகளும் மொத்தம் 30 ஆயிரம் பனை விதைகளை பிச்சாவரம் வனச்சரக அலுவலா் பாலமுருகன் தலைமையில் கிள்ளை மற்றும் பரங்கிப்பேட்டை காப்புக்காட்டு பகுதிகளில் அப்பகுதி பொதுமக்களைக் கொண்டு பனை விதைகள் நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிச்சாவரம் வனச்சரக வனவா் எம்.ராஜேஷ்குமாா், வனக்காப்பாளா்கள் விக்னேஷ்பிரபு , சரளா , ஞானசேகா், முத்துக்குமரன் , வனக்காவலா் தசரதராமன், சூழல் சுற்றுலா மேலாண்மை குழு உறுப்பினா்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.