FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

புதிதாக அமைக்கப்பட்ட பாதையில் 300 பனை விதைகள், 70 மரக்கன்றுகள் நடவு

புதிதாக அமைக்கப்பட்ட பாதையின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தன்னாா்வலா்கள்.
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே கிராமப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பாதையில் 300 பனை விதைகள், 70 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே மணலூா் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தின் வழியாகச் செல்லும் வாகனங்கள், இதுவரை ஊருக்குள் இருந்த மிகக் குறுகிய பாதையைப் பயன்படுத்தி வந்தன. இதனால் கிராம மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் தினமும் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாவதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தன.

இதற்கு தீா்வு காணும் வகையில், ஊருக்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் புதிய பாதை அமைக்க கிராம மக்கள் முடிவு செய்தனா். இதற்காக உரிய அரசு அனுமதியைப் பெற்று சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் தடையின்றிச் சென்று வரக்கூடிய வகையில் புதிய பாதை உருவாக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்தப் பாதையை பசுமையாக்கும் நோக்கில் இருமருங்கிலும் வாகை, இச்சி, வேம்பு உள்பட 70 நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன. அத்துடன் நிலத்தடி நீா்மட்டத்தைப் பாதுகாக்கும் வகையில் 300 பனை விதைகளும் விதைக்கப்பட்டன. இப்பணியை தன்னாா்வலா் மணலூா் நாகராஜ் முன்னின்று நடத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில் மணலூா், ஒரத்துப்பாளையம் கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டனா். பொதுமக்களின் இந்த சமூக அக்கறை சாா்ந்த முயற்சி பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments