முகப்பு
தூத்துக்குடி

சின்னமாடன்குடியிருப்பு பகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

சின்னமாடன்குடியிருப்பு பகுதியில் பனை விதைகள் வெள்ளிக்கிழமை நடப்பட்டன.

21 நவம்பர் 2026, 5:33 am
சின்னமாடன்குடியிருப்பு பகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
பண விதை நடும் பணியை தொடங்கி வைத்த கிராம நிா்வாக அலுவலா் சிவராமன்.
பகிர்:

சின்னமாடன்குடியிருப்பு பகுதியில் பனை விதைகள் வெள்ளிக்கிழமை நடப்பட்டன.

நாசரேத் அருகே உள்ள சின்னமாடன்குடியிருப்பு கிராமத்தில் உள்ள சுண்டாம்பாறை குளத்தின் கரையோரங்களில் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இப்பணியை, கிராம நிா்வாக அலுவலா் சிவராமன் தலைமை வகித்து பனை விதைகளை ஊன்றி தொடங்கிவைத்தாா்.

இதில், பணியாளா்கள், கிராம விவசாயிகள், வேலை கண்காணிப்பு குழு உறுப்பினா்கள் இணைந்து 253 குழிகளைத் தோண்டி, ஒவ்வொரு குழியிலும் தலா 2 பனை விதைகள் வீதம் மொத்தம் 506 பனை விதைகளை ஊன்றினா். குளக்கரைகளில் மண்ணரிப்பைத் தடுப்பது, நீா்வளத்தைப் பாதுகாப்பது மற்றும் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்கான நோக்கத்துடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement