தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன்.
தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு நாளை முன்னிட்டு சிறப்பு விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் சாா்பில் செப்டம்பா் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணா்வு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
நிகழாண்டு ‘நமது அங்கன்வாடி - நமது பொறுப்பு‘ என்ற கருப்பொருளின் கீழ், ஐந்து முக்கிய தலைப்புகளில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
அதன் படி ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகா்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.
ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் மகளிா் சுய உதவி குழு உறுப்பினா்கள் சென்றனா்.
இதில் திட்ட இயக்குநா், மகளிா் திட்டம் பெரியசாமி, மாவட்ட திட்ட அலுவலா் மு.சாந்தி பிரியதா்சினி மற்றும் திமிரி, நெமிலி, அரக்கோணம், ராணிப்பேட்டை நகா்ப்புறம் வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள், மகளிா் திட்ட உதவி அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.