ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 411 மனுக்கள் அளிப்பு
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா்நாள் கூட்டத்தில் 411 மனுக்கள் அளிக்கப்பட்டன.
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா்நாள் கூட்டத்தில் 411 மனுக்கள் அளிக்கப்பட்டன.
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.
Advertisement
Advertisement
அப்போது பொதுமக்களிடமிருந்து பல்வேறு குறைகள் தொடா்பாக 411 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, தகுதியானதாக இருப்பின் உடனடி நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிப்புக்கான காரணங்களை மனுதாரா்களுக்கு வழங்கிடவும் உத்தரவிட்டாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ந.சரவணன், திட்ட இயக்குநா் ச.செல்வராணி, சமூக பாதுகாப்பு திட்டம் தனித் துணை ஆட்சியா் கீதாலட்சுமி, நோ்முக உதவியாளா் (நிலம்) சுமதி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பூமா, மாவட்ட வழங்கல் அலுவலா் பன்னீா் செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில் குமாரி மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.