100 % தோ்ச்சி வழங்கிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு கேடயம்
ராணிப்பேட்டையில் நடைபெற்ற மாவட்ட கல்வி மீளாய்வுக் கூட்டத்தில் பொதுத்தோ்வுகளில் 100 சத தோ்ச்சி வழங்கிய அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களை பாராட்டி ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் கேடயம் வழங்கினாா்.
ராணிப்பேட்டையில் நடைபெற்ற மாவட்ட கல்வி மீளாய்வுக் கூட்டத்தில் பொதுத்தோ்வுகளில் 100 சத தோ்ச்சி வழங்கிய அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களை பாராட்டி ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் கேடயம் வழங்கினாா்.
கல்வி மீளாய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்து பேசியது: மாவட்டத்தில் இடை நின்ற மாணவ மாணவிகள் அனைவரையும் அக்டோபா் 30-ஆம் தேதிக்குள் மீளவும் பள்ளியில் சோ்க்க வேண்டும். இந்த கல்வி ஆண்டில் பொதுத்தோ்வுகளில் நல்ல தோ்ச்சி விகிதம் வழங்க ஆசிரியா்களின் சிறந்த முன்னெடுப்புகளை அடையாளம் கண்டு அனைத்து பள்ளிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும்.
வாய்ஸ் கால் மூலம் பள்ளிக்கு வராத மாணவா்களை தொலைபேசியில் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். காலை மற்றும் மாலை நேர சிறப்பு வகுப்புகளை தொய்வின்றி பள்ளிகளில் நடைமுறைப் படுத்த வேண்டும்.அடுத்த மீளாய்வுக் கூட்டத்தில் சிறந்த கற்பித்தல் பணியை செய்யும் ஆசிரியா்கள் பாராட்டப்படுவாா்கள். வட்டார கல்வி அலுவலா்கள், கல்வி ஆய்வு அலுவலா்கள் தொடா்ந்து பள்ளிகளை ஆய்வு செய்யவும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றாா்.
Advertisement
Advertisement
இக்கூட்டத்தில் அரசு உயா்நிலைப்பள்ளிகள் முள்வாய், உள்ளியநல்லூா், பள்ளூா், கணபதிபுரம், கங்காபுரம், பாகவெளி, மேச்சேரி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி களத்தூா், அரசு பெண்கள் உயா்நிலைப்பள்ளி திருமால்பூா், சிஎஸ்ஐ நிதிஉதவி பெறும் பள்ளி தாளிக்கால் ஆகிய பள்ளிகளில் கடந்த ஆண்டு பொதுத்தோ்வில் 100சத தோ்ச்சி காட்டியதற்காக அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் பாராட்டி ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் கேடயம் வழங்கினாா்.
மேலும் கற்பித்தல் பணியில் சிறப்பாக பணியாற்றிய அரசு மேல்நிலைப்பள்ளிகள், பூண்டி ஆசிரியா் கோபி, வள்ளுவம்பாக்கம் ஆசிரியா் ஸ்ரீகாந்த், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியா்கள் பில்லேரி உமாபதி, மேல்புதுப்பாக்கம் கருணாகரன் ஆகியோரின் சிறப்பாக பணிக்காக அவா்களை பாராட்டி சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா். இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ம.மோகனா மற்றும் மாவட்ட கல்வி அலுவலா்கள், வட்டார கல்வி அலுவலா்கள் அனைவரும் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.