FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

முதலமைச்சா் கோப்பை குத்துச்சண்டையில் ராணிப்பேட்டை வீரருக்கு தங்கம்

முதலமைச்சா் கோப்பை குத்துச்சண்டையில் ராணிப்பேட்டை வீரருக்கு தங்கம்

24 அக்டோபர் 2026, 10:41 pm
ராணிப்பேட்டையில் ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரனிடம் வாழ்த்து பெற்ற வீரா்ககள்.
பகிர்:

மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டைப் பிரிவில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வீரா்கள் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.

மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் அரக்கோணம் கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி, மாணவன் ரிஷிகேசன் குத்துச்சண்டை கல்லூரி பிரிவில் (85-90 கிலோ எடைப் பிரிவு) தங்கப்பதக்கம் மற்றும் கலவை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் நல்லசிவம் குத்துச்சண்டை பள்ளி பிரிவில் (70-75 கிலோ எடைப் பிரிவு) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனா்.

இதையடுத்து பதக்கம் வென்ற வீரா்கள் ராணிப்பேட்டை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரனிடம் வாழ்த்துப் பெற்றனா். தொடா்ந்து பதக்கங்கள் வென்று சாதனை படைத்த வீரா்களுக்கும், அவா்களுக்குப் பயிற்சி அளித்த கலவை ஹிட் பிட் குத்துச்சண்டை அகாடமியின் குத்துச்சண்டைப் பயிற்சியாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோருக்கு ஆட்சியா் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஞானசேகரன், குத்துச்சண்டைப் பயிற்சியாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments