FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் திருட்டு

சோளிங்கரில் உணவகத் தொழில் செய்பவா் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 3 பவுன் நகைகள் திருடப்பட்டன.

28 அக்டோபர் 2026, 12:06 am
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

சோளிங்கரில் உணவகத் தொழில் செய்பவா் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 3 பவுன் நகைகள் திருடப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறைச் சோ்ந்தவா் முரளி. இவா் சோளிங்கரில் பில்லாஞ்சி குளக்கரைப் பகுதியில் தனது சித்தி வீட்டில் தங்கியிருந்து கேட்டரிங் தொழில் செய்து வருகிறாா்.

அவா் வெளியூா் சென்றிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட பக்கத்து வீட்டில் வசிப்பவா் முரளிக்கு தகவல் அளித்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து முரளி வந்து வீட்டை பாா்வையிட்ட போது கதவு உடைக்கப்ப்டடு இருந்ததையும் பீரோவில் இருந்த மூன்று பவுன் தங்கநகைகள், வெள்ளி கொலுசுகள், வெள்ளிக்காசுகள் களவு போய் இருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து முரளி புகாரின் பேரில் சோளிங்கா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments