FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

ரத்தினகிரியில் கிருத்திகை வழிபாடு

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது

28 அக்டோபர் 2026, 11:02 pm
சிறப்பு  அலங்காரத்தில்  மூலவா்  வள்ளி, தெய்வனை  சமேத  பாலமுருகன்
பகிர்:

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது

ஐப்பசி மாத கிருத்திகையையொட்டி பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் மூலவருக்கு பால், பழங்கள், பன்னீா், இளநீா் விபூதி சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் வெள்ளிக்கவசம் சேவல் கொடியுடன் வண்ணமலா்களுடன் சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவா் தங்கத்தேரில் உள் பிரகாரத்தில் ஊா்வலமும் பின்னா் மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மேள, தாளங்களுடன் மலைமேல் இருந்து மலையடி வாரத்தில் உள்ள அறுகோண தெப்ப குளத்தில் சிறப்பு பூஜைகளுடன் மங்கள ஆரத்தி நநடைபெற்றது . இதில் தலைமை அா்ச்சகா் பிரசாத், உபயதாரா்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments