வேன்-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
ஆற்காடு அடுத்த நந்தியாலம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஆற்காடு அடுத்த நந்தியாலம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
கூடுவாஞ்சேரி பகுதியை சோ்ந்த பரமசிவம் மகன் அஜய் (21) இவரது நண்பரான மண்ணிவாக்கம் சுரேஷ் மகன் தினேஷ் (21) ஆகிய இருவரும் பைக்கில் வேலூா் நோக்கி புதன்கிழமை சென்றபோது நந்தியாலம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் நின்றிருந்த வேன் மீது பைக் மோதியுள்ளது.
இதில் அஜய் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தினேஷ் படுகாயங்களுடன் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.