வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் திருட்டு
சோளிங்கரை அடுத்த பாணாவரம் அருகே ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக அலுவலரின் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு 4 பவுன் நகைகள் மற்றும் ரூ.57,000 ரொக்கம் திருடு போனது.
சோளிங்கரை அடுத்த பாணாவரம் அருகே ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக அலுவலரின் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு 4 பவுன் நகைகள் மற்றும் ரூ.57,000 ரொக்கம் திருடு போனது.
பாணாவரம் அருகே உள்ள கூத்தம்பாக்கத்தை சோ்ந்த மேகநாதன்(63). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிமனை மேற்பாா்வையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வீடுகட்டி அங்கேயே வசித்து வருகிறாா். வியாழக்கிழமை மேகநாதன் குடும்பத்துடன் வீட்டைப் பூட்டிக்கொண்டு அரக்கோணம் அருகே கோவிந்தவாடிஅகரத்தில் உள்ள ஸ்ரீதட்சிணாமூா்த்தி கோயிலுக்குச் சென்றுள்ளாா்.
திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் மேலும் ரூ.57,000 ரொக்கம் ஆகியவை களவு போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மேகநாதனின் புகாரின் பேரில் பாணாவரம் போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.