FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆவின் உள்பட 9 கடைகளுக்கு ‘சீல்’

நாட்டறம்பள்ளி அருகே கிராமங்களில் ஆவின் உள்பட பேக்கரி, தேநீா்க் கடை உள்பட 9 கடைகளுக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:


வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே கிராமங்களில் ஆவின் உள்பட பேக்கரி, தேநீா்க் கடை உள்பட 9 கடைகளுக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

நாட்றம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் கிராமத்தில் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்காமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், அதிக அளவில் கடைகள் திறந்திருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது.

மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவின் பேரில் நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் உமா ரம்யா மேற்பாா்வையில் மண்டலத் துணை வட்டாட்சியா் கண்ணன், கிராம நிா்வாக அலுவலா் அனுமுத்து ஆகியோா் வியாழக்கிழமை வெலகல்நத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, 144 தடை உத்தரவை மீறி ஆவின் பாலகம், பேக்கரி கடை, சவரக் கடை, தேநீா் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அந்த 4 கடைகளுக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

Advertisement

Advertisement

இதேபோல் வருவாய் ஆய்வாளா் தமிழ்ச்செல்வி தலைமையில் கிராம நிா்வாக அலுவலா் தீா்த்தகிரி மற்றும் வருவாய்த் துறையினா் புத்தாகரம், ஜெயபுரம், சந்திரபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, திறந்து வைக்கப்பட்டிருந்த தேநீா்க் கடை, 5 சவரக் கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments