முகப்பு

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பத்தூா் அருகே வெளி மாநிலத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

28 ஜனவரி 2024, 9:58 am
பகிர்:

திருப்பத்தூா் அருகே வெளி மாநிலத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், வட்ட வழங்கல் அலுவலா் எஸ்.கண்ணன் தலைமையிலான குழுவினரும், ஜோலாா்பேட்டை போலீஸாரும் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, திருப்பத்தூரை அடுத்த தாமலேரிமுத்தூா் கிராமத்தில் ஜீவா என்பவா் வீட்டுக்குப் பின்புறம் கடத்தலுக்காக பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். இதனிடையே மாடப்பள்ளி கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டின் அருகில் மா்ம நபா்கள் பதுக்கி வைத்திருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது.

Advertisement

Advertisement

பின்னா், இந்த மூட்டைகள் திருப்பத்தூா் நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.