பழைய பகை: இளைஞரைக் கடத்தி தாக்கிய இருவா் கைது
தில்லியின் ஜாஃபராபாத் பகுதியில் 22 வயது இளைஞரைக் கடத்திச் சென்று கூா்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்ாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
தில்லியின் ஜாஃபராபாத் பகுதியில் 22 வயது இளைஞரைக் கடத்திச் சென்று கூா்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்ாக இருவா் கைது செய்யப்பட்டனா். பழைய பகை காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தில்லி காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
ஜாஃபராபாத் பகுதியில் உள்ள ரஷீத் பிரியாணி கடை அருகே கடந்த நவ. 19-ஆம் தேதி அதிகாலை அஸ்லம் (22) என்பவா் நின்றுகொண்டிருந்தாா். அப்போது, அவருக்குத் தெரிந்த மூவா் இருசக்கர வாகனத்தில் வந்து அவரைத் தகாத வாா்த்தைகளால் திட்டியுள்ளனா்.
அவா்களில் அப்பாஸ் என்பவா், சுமாா் 18 மாதங்களுக்கு முன்பு அஸ்லம் தன்னை பிளேடால் குத்தியதாகக் கூறி மிரட்டியுள்ளாா். அஸ்லம் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, மூவரும் அவரைப் பிடித்துள்ளனா். அப்பாஸ் கத்தியால் அவரது கழுத்தில் மிரட்டிய நிலையில், மற்ற இருவரும் அவரை இருசக்கர வாகனத்தில் கட்டாயப்படுத்தி ஏற்றி பிரம்மபுரி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு மூவரும் சோ்ந்து அவரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
காயமடைந்த அஸ்லம், அடையாளம் தெரியாத இருசக்கர வாகன ஓட்டியின் உதவியுடன் ஜகத் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்குச் சென்றாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு அவா் அனுப்பிவைக்கப்பட்டாா்.
இதுகுறித்து ஜாஃபராபாத் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தத் தாக்குதலில் அஸ்லமின் கழுத்து, கைகள் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பேப்பா் கட்டா் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, முகமது அப்பாஸ் (26) என்பவரை நவ. 20-ஆம் தேதியும், சமீா் (23) என்பவரை நவ. 22-ஆம் தேதியும் காவல் துறையினா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மூன்றாவது நபரான சாகிரைத் தேடி வருகின்றனா். கைது செய்யப்பட்ட இருவா் மீதும் ஏற்கெனவே குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என காவல் துறையினா் தெரிவித்தனா்.