முகப்பு

உ.பி.யில் தந்தை-மகன் சுட்டுக் கொலை!

உ.பி.யில் பழைய பகை காரணமாக தந்தை, மகன் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி...

28 வினாடிகள் முன்பு
உ.பி.யில் தந்தை-மகன் சுட்டுக் கொலை!
கோப்புப்படம்.
பகிர்:

உ.பி.யில் பழைய பகை காரணமாக தந்தை, மகன் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள தாதுத்பூர் கிராமத்தில், பழைய பகை காரணமாக தந்தை மற்றும் மகன் அடையாளம் தெரியாத நபர்களால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினரின் தகவல்படி, கொல்லப்பட்டவர்கள் முக்தியார் சிங் (65) மற்றும் அவரது மகன் சுக்ஜிந்தர் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

குற்றவாளிகளைக் கைது செய்ய நான்கு காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் சூரஜ் குமார் ராய் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தியவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து, வீட்டில் அமர்ந்திருந்த தந்தை மற்றும் மகனைச் சுட்டுக் கொன்றனர். பலியானவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தாதுத்பூர் கிராமம், உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது.

summary

A father-son duo were shot dead by unidentified individuals over old enmity at Dadudpur village in Muzaffarnagar district on Sunday evening, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.