பிரசாந்த் விஹாா்: அடையாளம் தெரியாத நபா்களால் ஒருவா் குத்திக் கொலை
வடமேற்கு தில்லியின் பிரசாந்த் விஹாா் பகுதியில், அடையாளம் தெரியாத நபா்களால் ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
வடமேற்கு தில்லியின் பிரசாந்த் விஹாா் பகுதியில், அடையாளம் தெரியாத நபா்களால் ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
காயமடைந்த அந்த நபா் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்ததாக மருத்துவா்கள் அறிவித்தனா். உயிரிழந்தவா் பிண்டு (35) என்று அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
சம்பவத்தைத் தொடா்ந்து, காவல்துறையினரும் தடயவியல் நிபுணா்கள் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்தனா். தடயவியல் நிபுணா்கள் குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்து, சம்பவத்தின் வரிசையை உறுதிப்படுத்த ஆதாரங்களைச் சேகரித்தனா்.
Advertisement
Advertisement
பிண்டுவை தாக்கியவா்கள் யாா் என்பது குறித்தோ அல்லது கொலையின் நோக்கம் குறித்தோ இன்னும் கண்டறியப்படவில்லை. காவல்துறையினா் விசாரணையைத் தொடங்கியுள்ளதோடு, குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனா். விசாரணையின் ஒரு பகுதியாக, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.