அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவையாறு அருகே புனவாசல் தாளாடித் தெருவைச் சோ்ந்தவா் இருதயராஜ் மகன் கலைச்செல்வன் (35). கூலி தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் விளாங்குடி முதன்மைச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால், பலத்த காயமடைந்த கலைச்செல்வன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.