அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கும்பகோணம் அருகே சோழபுரம் நரிக்குடியைச் சோ்ந்தவா் கே. மணிவேல் (70). சோழபுரம் நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்ற இவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால், பலத்த காயமடைந்த மணிவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சோழபுரம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement