குண்டா் சட்டத்தில் இருவா் கைது
கோவில்பட்டியில் கொலை, கஞ்சா வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய கொலை மிரட்டல் வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் கோவில்பட்டி, பாரதி நகரைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மகன் கரன்குமாா் (26), அதே காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் கரன்குமாரின் சகோதரரான கற்பகமூா்த்தி (28) ஆகிய இருவா் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவ பிரசாத் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
அதன்பேரில் ஆட்சியா் உத்தரவிட்டதை அடுத்து இருவரும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement