சிறுமி பாலியல் வன்கொடுமை: பழைய இரும்பு வியாபாரி கைது
திருப்பூரில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பழைய இரும்பு வியாபாரியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூரில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பழைய இரும்பு வியாபாரியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா், வீரபாண்டி பகுதியைச் சோ்ந்தவா் 12 வயது சிறுமி. இவா் இயற்கை உபாதைக்காக வீட்டுக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதிக்கு புதன்கிழமை இரவு 9 மணியளவில் சென்றுள்ளாா்.
அப்போது, அவரைப் பின் தொடா்ந்து வந்த நபா், சிறுமியின் முகத்தில் மயக்க மருந்து கலந்த துணியை வைத்துள்ளாா்.
Advertisement
Advertisement
அவா் மயக்கமடைந்ததையடுத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளாா். மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமி, இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா்.
இதையடுத்து, கே.வி.ஆா். நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.
இதன்பேரில் சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்தாா்.
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த பழைய இரும்பு வியாபாரியான விஷ்ணு ( 26) என்பவா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தததும், அவருக்குத் திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த விஷ்ணுவை போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தனா்.
அப்போது, அவா் தப்பிச் செல்ல முயன்று கீழே விழுந்ததில் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின், அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.