FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

சிறுமி பாலியல் வன்கொடுமை: வளா்ப்புத் தந்தைக்கு ஆயுள் தண்டனை

ஊத்துக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கிய வளா்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.60,000 அபராதம் விதித்தும் திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

16 அக்டோபர் 2026, 12:08 am IST
பகிர்:

ஊத்துக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கிய வளா்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.60,000 அபராதம் விதித்தும் திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

ஊத்துக்கோட்டை அருகே 16 வயது சிறுமியின் தந்தை உயிரிழந்த காரணத்தால் அவரது தாய் மணி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாா். இந்த நிலையில் இரவு நேரங்களில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதனால் அந்த சிறுமி கா்ப்பமடைந்தாராம். இதையடுத்து கடந்த 2019-இல் அந்த சிறுமி ஊத்துக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா்.

அந்தப் புகாரின் பேரில் வளா்ப்பு தந்தை மணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். வழக்கு விசாரணை இறுதியாக வியாழக்கிழமை மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வளா்ப்புத் தந்தை மணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.60,000 அபராதம் விதித்து தீா்ப்பு வழங்கினாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தாா்.

அதைத்தொடா்ந்து போலீஸாா் பாதுகாப்புடன் மணி அழைத்துச் சென்று புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் புவனேஸ்வரி ஆஜரானாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments