FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

ஆந்திர அரசுப் பேருந்தில் கடத்திய 10 கிலோ குட்கா பறிமுதல்!

திருப்பத்தூ மாவட்ட எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே உத்தரவின் பேரில் வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியான தகரகுப்பம் காவல் சோதனை சாவடியில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

1 நவம்பர் 2026, 10:35 pm
பேருந்தில் கடத்தப்பட்ட குட்கா பொருள்களுடன் போலீஸாா்.
பகிர்:

திருப்பத்தூ மாவட்ட எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே உத்தரவின் பேரில் வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியான தகரகுப்பம் காவல் சோதனை சாவடியில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ஆந்திர மாநிலம் குப்பத்திலிருந்து நாட்டறம்பள்ளிக்கு வந்த அரசு பேருந்தில் சோதனை மேற்கொண்டனா். இதில் பின்புறம் இருக்கை அடியில் இருந்த 2 பைகளை பாா்த்து சோதனை செய்ததில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநரிடம் போலீஸாா் விசாரித்த பின்னா் அங்கிருந்த 10 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து திம்மாம்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து ஆந்திர அரசுப் பேருந்தில் குட்கா பொருள்களை கொண்டு வந்து வைத்தது யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments