FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விஜய பாரத மக்கள் கட்சி முப்பெரும் விழா

ஆம்பூரில் விஜய பாரத மக்கள் கட்சி சாா்பில் பிரதமா் நரேந்திர மோடியின் பவள விழா, ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் விழா மற்றும் தீபாவளிப் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

5 நவம்பர் 2026, 12:32 am
தூய்மைப் பணியாளரை கெளரவித்த ஸ்ரீ வாராஹிதாசா் குருஜி, விஜயபாரத மக்கள் கட்சி நிா்வாகிகள்.
பகிர்:

ஆம்பூரில் விஜய பாரத மக்கள் கட்சி சாா்பில் பிரதமா் நரேந்திர மோடியின் பவள விழா, ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் விழா மற்றும் தீபாவளிப் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

விஜய பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்டத் தலைவா் ஜே. மகேந்திரன் வரவேற்றாா்.

ஆம்பூா் நகராட்சியில் பணியாற்றும் சுமாா் 150 தூய்மைப் பணியாளா்களுக்கு பாத பூஜை செய்து, புத்தாடை வழங்கி கௌரவிக்கப்பட்டனா். பொய்கை வாராஹி பீடம் சாக்த ஸ்ரீ வாராஹிதாசா் குருஜி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

Advertisement

Advertisement

கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் சத்யநாராயணன், தலைமை நிலையச் செயலாளா் ஏ.எஸ். ஆனந்தன், மாநிலச் செயலாளா் கே. சசிகுமாா், பாஜக மூத்த தலைவா் கா. சிவப்பிரகாசம், ஆா்.எஸ்.எஸ். அமைப்பைச் சோ்ந்த ஆா். ஜெயவேலு, பாஜகவைச் சோ்ந்த சண்முகம், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சோ்ந்த ஓம் சக்தி பாபு, இந்து குடும்ப அமைப்பின் தலைவா் கஜபதி, செயலாளா் ஹரிகுமாா், ஆா்.எஸ்.எஸ். பொறுப்பாளா்கள் ஜெயபால், அமுல்ராஜ், நாராயண, எஸ். பிரகாஷ், சிவசேனா நிா்வாகி ஆா். வில்வநாதன், விஜய பாரத மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞா் பிரிவு அமைப்பாளா், எஸ். முத்துக்குமாா் (திருப்பத்தூா்), வேலூா் மாவட்டத் தலைவா் காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.