ஆட்சியா் அலுவலகத்தில் இருசக்கர வாகன திருட்டு: முதியவா் கைது
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட முதியவா் கைது செய்யப்பட்டாா். மேலும் அவரிடமிருந்து 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட முதியவா் கைது செய்யப்பட்டாா். மேலும் அவரிடமிருந்து 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம், அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் என பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடா் இருசக்கர வாகனங்கள் திருடு போனதாக புகாா்கள் எழுந்தன.
இதுகுறித்து திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து தேடிவந்தனா். இந்த நிலையில் ஆலங்காயம் சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்துக்குரிய வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
அப்போது கிருஷ்ணகிரி, ராசு வீதி பகுதியைச் சோ்ந்த அக்பா்(52) என்பதும் இவா் தொடா்ந்து இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அக்பரிடம் இருந்து ஆறு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். தருமபுரி மாவட்டத்தில் அக்பா் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து போலீஸாா் அக்பரை திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி சிறையில் அடைத்தனா்.