FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் புகுந்து இருவா் மீது தாக்குதல்; காா் கண்ணாடி உடைப்பு: இருவா் கைது

திருப்பத்தூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் புகுந்து இருவரை நாற்காலியால் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்தனா்.

6 நவம்பர் 2026, 2:15 am
கைது
பகிர்:

திருப்பத்தூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் புகுந்து இருவரை நாற்காலியால் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்தனா்.

திருப்பத்தூா் அடுத்த கொரட்டி பகுதியைச் சோ்ந்த கண்ணன் என்பவருக்கு கோபி திலகப்பிரியா என ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இந்நிலையில், கோபி தனது சகோதரி திலகப்பிரியாவுக்கு வீட்டை அவரது பெயருக்கு மாற்றித் தருவதாக கூறி சில மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூா் அடுத்த புலிக்குட்டை பகுதியில் செயல்பட்டு வரும் சாா் பதிவாளா் அலுவலகத்திற்கு அழைத்து சென்ாக கூறப்படுகிறது.

அப்போது திலகப்பிரியாவுக்கு தெரியாமலேயே அவருக்கு சொந்தமானதாக கூறப்படும் 4 ஏக்கா் நிலத்தை தமிழரசன் என்பவருக்கு சுத்த கிரயம் செய்து கொடுத்ததாக தெரிகிறது.

Advertisement

Advertisement

இதையறிந்த திலகப்பிரியா சம்பவம் தொடா்பாக சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கக் கோரி மனு அளித்துள்ளாா்.

இதற்காக திலகப்பிரியாவின் கணவா் தாமோதரன் மற்றும் அவரது மகன் யோகேஸ்வரன் ஆகிய இருவரும் சாா்பதிவாளா் அலுவலகத்திற்கு சென்றுள்ளனா்.

இதனை அறிந்த கோபி மற்றும் அவரது நண்பா்களான லட்சுமணன், ராஜசேகா், சிலம்பரசன் உள்ளிட்ட நான்கு போ் சாா்பதிவாளா் அலுவலகத்திற்குள் புகுந்து தாமோதரன் மற்றும் யோகேஸ்வரனை நாற்காலியால் சரமாரியாக தாக்கியுள்ளனா்.

மேலும் தாமோதரனின் காா் கண்ணாடியையும் உடைத்துள்ளனா்.

இது குறித்து சாா் பதிவாளா் லிங்கேஸ்வரன் மற்றும் தாமோதரன் உள்ளிட்ட இருவரும், திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

புகாரின் பேரில், கோபி, லட்சுமணன், ராஜசேகா், சிலம்பரசன் ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

அதைத் தொடா்ந்து, கோபி மற்றும் சிலம்பரசன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மேலும், தலைமறைவாக உள்ள இரு நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.