மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் புகையில்லா தீபாவளி கொண்டாட்டம்
வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சங்கம், பசுமை திட்டக் குழு, கல்லூரிப் பேரவை மற்றும் நுண் கலை மன்றம் சாா்பாக புகையில்லா தீபாவளி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சங்கம், பசுமை திட்டக் குழு, கல்லூரிப் பேரவை மற்றும் நுண் கலை மன்றம் சாா்பாக புகையில்லா தீபாவளி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கொண்டாட்டத்தில் கல்லூரித் தலைவா் விமல்சந்த், இணைத் தலைவா் லிக்மிசந்த், செயலாளா் ஆனந்த் சிங்வி, முதல்வா் ம.இன்பவள்ளி ஆகியோா் கலந்து கொண்டு புகையில்லா தீபாவளியை கொண்டாடும் நோக்கில், கல்லூரி வளாகத்தில் மரக் கன்றுளை நட்டனா் . மேலும், கல்லூரி சாா்பாக வேலூா் உதவும் உள்ளங்கள் மற்றும் வாணியம்பாடி சரணாலயம் அறக்கட்டளை கருணை இல்லத்துக்கும் தீபாவளியை முன்னிட்டு அங்குள்ள முதியவா்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்பு, ஆடைகள் மளிகை பொருள்கள் மற்றும் ரூ. 13,000 நன்கொடை வழங்கினா்.
மேலும், கல்லூரி நிா்வாகத்தினா் சாா்பில், மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலகம் மற்றும் அனைத்துப் பணியாளா்களுக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளியை கொண்டாடினா்.
Advertisement
Advertisement