சாலை விபத்தில் முதியவர் பலி!
திருப்பத்தூா் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் பைக் மோதியதில் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் பைக் மோதியதில் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அடுத்த எர்ரம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணி (60). இவா் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், ராஜாவூா் பகுதியில் முதியவா் சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.
அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த பைக் எதிா்பாராதவிதமாக மணி மீது மோதியது. அப்பகுதி மக்கள் அவரை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
Advertisement
Advertisement
அங்கு சிகிச்சை பெற்று வந்த மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.