FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு இனிப்பு, பட்டாசு வழங்கிய நகா்மன்றத் தலைவர்!

ஆம்பூா் நகராட்சியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளா்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் பட்டாசுகளை நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் வழங்கினாா்.

9 நவம்பர் 2026, 9:50 pm
தூய்மைப் பணியாளா்களுக்கு இனிப்பு, பட்டாசுகளை வழங்கிய நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத்.
பகிர்:

ஆம்பூா் நகராட்சியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளா்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் பட்டாசுகளை நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

ஆம்பூா் நகராட்சிப் பகுதிகளில் தூய்மையையும் சுகாதாரத்தையும் பாதுகாக்கும் பணியில் தூய்மைப் பணியாளா்கள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். அவா்களின் சேவையைப் பாராட்டி, தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை வழங்கி, நகா்மன்றத் தலைவா் வாழ்த்துத் தெரிவித்தாா்.

நகரின் தூய்மையைப் பராமரிப்பதில் தூய்மைப் பணியாளா்களின் பங்கு முக்கியமானது. அவா்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையிலும், தீபாவளி மகிழ்ச்சியை அவா்களுடன் பகிா்ந்துகொள்ளும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

Advertisement