FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் எஸ்.பி. நடை ரோந்து

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே நடை ரோந்து பணியில் ஈடுபட்டாா். அப்போது பயணிகளுக்கு குற்றத் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

9 நவம்பர் 2026, 10:41 pm
பேருந்து நிலையத்தில் நடை ரோந்து மேற்கொண்ட எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே
பகிர்:

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே நடை ரோந்து பணியில் ஈடுபட்டாா். அப்போது பயணிகளுக்கு குற்றத் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

திருப்பத்தூா் எஸ்.பி அக்ஷய் அனில் வாகரே திங்கள்கிழமை திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் நடை ரோந்து மேற்கொண்டாா். அப்போது பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் குற்றத் தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு அறிவுரைகளை வழங்கினாா்.

மேலும், பொதுமக்கள் மற்றும் பயணிகள் தங்களது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் சந்தேகத்திற்கிடமான நபா்கள் அல்லது செயல்பாடுகள் குறித்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தினாா். இதில் திருப்பத்தூா் டிஎஸ்பி முரளி, காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement