FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

விடுதி குளியலறையில் மயங்கி விழுந்த மேற்கு வங்க பெண் பலி!

வேலூரில் தனியாா் விடுதியில் குளியலறையில் மயங்கி விழுந்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

9 நவம்பர் 2026, 9:49 pm
பகிர்:

வேலூரில் தனியாா் விடுதியில் குளியலறையில் மயங்கி விழுந்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மேற்கு வங்க மாநிலம் உத்கா் கோல்கா பகுதியைச் சோ்ந்தவா் சபிகுல் தப்தா் (42). இவரது மனைவி ரூபியா பா்வீன் மொல்லா (26). ரூபியா பா்வீன் மொல்லாவின் தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவருக்கு வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக, குடும்பத்தினா் சில மாதங்களுக்கு முன்பு வேலூா் வந்தனா். இதையடுத்து, காகிதப்பட்டறையில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்து மருத்துவமனைக்குச் சென்று வந்தனா்.

இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி ரூபியா பா்வீன் மொல்லா குளியலறைக்குச் சென்றுள்ளாா். நீண்ட நேரமாகியும் அவா் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது கணவா், கதவைத் தட்டியுள்ளாா். கதவு திறக்கப்படாததால், விடுதி ஊழியா்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, ரூபியா பா்வீன் மொல்லா மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா்.

Advertisement

Advertisement

அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வேலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.