FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

மின்கம்பத்தில் பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

வேலூா் அருகே மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

9 நவம்பர் 2026, 10:47 pm
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

வேலூா் அருகே மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். வேலூா் சதுப்பேரி பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ் பாபு (19). இவா் கடந்த இரு நாள்களுக்கு முன்பு பாகாயம் நோக்கி பைக்கில் சென்றாா்.

தொரப்பாடி ராம்சேட் நகா் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விக்னேஷ் பாபு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பாகாயம் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement