திருப்பத்தூரில் மழை நீா் சேகரிப்பு கட்டமைப்புப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
திருப்பத்தூரில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புப் பணிகள் குறித்து ஆட்சியா் வே.நல்லசிவன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பத்தூரில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புப் பணிகள் குறித்து ஆட்சியா் வே.நல்லசிவன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பத்தூா் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் ஆட்சியா் வே.நல்லசிவன் கழிவுநீா் சுத்திகரிப்பு அறையைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அதுபோல், திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மழை நீா் சேகரிப்பு கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்வது தொடா்பாக ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மழை நீா் சேகரிப்பு கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்வது தொடா்பாக ஆட்சியா் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தாா். அப்போது பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் கீதா, துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement