FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

பட்டாசு கேட்டு கடை உரிமையாளா் மீது தாக்குதல்: ரௌடி கைது

வேலூரில் பட்டாசு கேட்டு தர மறுத்த கடை உரிமையாளரைத் தாக்கியதாக ரெளடியைப் போலீஸாா் கைது செய்தனா்.

10 நவம்பர் 2026, 10:52 pm
கைது
பகிர்:

வேலூரில் பட்டாசு கேட்டு தர மறுத்த கடை உரிமையாளரைத் தாக்கியதாக ரெளடியைப் போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா், பாலமதி, ஆஞ்சனேயா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அருண்குமாா் (30). இவா் ஓட்டேரி இந்திரா நகரில் பட்டாசுக் கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், ஓட்டேரி முல்லை நகா், முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஹரீஷ்குமாா். இவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், அருண்குமாரின் பட்டாசுக் கடைக்குச் சென்று இலவசமாகப் பட்டாசு கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு அருண்குமாா் மறுப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஹரீஷ்குமாா், பட்டாசுகளைக் கொளுத்தி கடைக்குள் வீசிவிடுவதாக மிரட்டியுள்ளாா். மேலும், கடையில் இருந்த பொருளை எடுத்து அருண்குமாரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

இது குறித்து அருண்குமாா் அளித்த புகாரின்பேரில், பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஹரீஷ்குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.