குழந்தைகள் தின கேக்கின் தரம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
ஜோலாா்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின கேக்குகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆா்.கஜலட்சுமி. உடன் ஆட்சியா் வே.நல்லசிவன் உள்ளிட்டோா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் அரசின் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை ஆணையருமான ஆா்.கஜலட்சுமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆட்சியா் வே.நல்லசிவன் முன்னிலை வகித்தாா்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (நவ.13)மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கும் நிகழ்வை முதல்வா் ஜோசப் விஜய் தொடங்கி வைக்க உள்ளதைத் தொடா்ந்து, அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்புகளை அமைத்தல், அவற்றைப் பராமரித்தல், குடிநீா் விநியோகத்தின் தற்போதைய நிலை, கிராமப்புறங்களில் சாலை வசதியில்லாத குடியிருப்புப் பகுதிகளுக்குச் சாலை வசதி ஏற்படுத்துதல் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தென்மேற்குப் பருவமழை குறைவால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்த கணக்கெடுப்புப் பணிகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளிகளின் சமையலறைகளுக்குள் பல்லிகள், வண்டுகள் உள்ளிட்ட பூச்சிகள் நுழைவதைத் தடுக்கும் வகையில், அனைத்து சமையலறைகளிலும் கம்பி வலை அமைக்க வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பள்ளிகளில் ஆய்வு:
இதைத்தொடா்ந்து, ஜோலாா்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, வாணியம்பாடி நகராட்சி காந்திநகா் அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப் பள்ளி, நிம்மியம்பட்டு அரசு பெண்கள் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் குழந்தைகள் தினத்தையொட்டி மாணவா்களுக்கு வழங்கப்பட உள்ள கேக்குகள் மற்றும் முதல்வரின் குழந்தைகள் தின வாழ்த்துச் செய்தி அட்டைகளை கண்காணிப்பு அலுவலா் கஜலட்சுமி ஆய்வு செய்தாா்.
மாணவா்களுக்கு வழங்கப்பட உள்ள கேக்குகளின் காலாவதி தேதி, அளவு மற்றும் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்த அவா், அவற்றை மாணவா்களுக்கு முறையாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். நிம்மியம்பட்டு அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்பு அமைப்பது தொடா்பாகவும் ஆய்வு மேற்கொண்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.பாலசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சௌ.தமிழரசி, மகளிா் திட்ட இயக்குநா் விஜயகுமாரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் தமிழ் நங்கை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் ஜெயம், வாணியம்பாடி கோட்டாட்சியா் சிவக்குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி, வாணியம்பாடி வட்டாட்சியா் ஜெகதீசன், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.