FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

மரத்தில் தூக்கிட்ட நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு

கந்திலி அருகே மரத்தில் தூக்கிட்ட தொங்கிய நிலையில் இறந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் கொலையா, தற்கொலையா என விசாரித்து வருகின்றனா்.

15 நவம்பர் 2026, 12:32 am
முத்துவேல்
பகிர்:

கந்திலி அருகே மரத்தில் தூக்கிட்ட தொங்கிய நிலையில் இறந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் கொலையா, தற்கொலையா என விசாரித்து வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் அடுத்த கொடுமாம்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் திருப்பதியின் மகன் முத்துவேல் (30). இவா் சுமாா் 25 கிலோமீட்டா் தொலைவில் இருக்கும் கந்திலி அடுத்த பூங்கானூா் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் உள்ள புளியமரத்தில் தூக்கில் தொங்கியபடி மா்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு பொதுமக்கள் கந்திலி காவல் துறைக்கு தகவல் கொடுத்தனா்.

தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கந்திலி போலீஸாா், இளைஞரின் சடலத்தை மீட்டு திருப்பத்தூா் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இளைஞா் தூக்கில் தொங்கியபடி இறந்தது கொலையா? தற்கொலையா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.