FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

மூதாட்டியிடம் தாலியை பறிக்க முயன்ற இளைஞா் கைது

திருப்பத்தூா் அருகே மூதாட்டியை தாக்கி தாலியை பறிக்க முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

33 வினாடிகள் முன்பு
கைதான கேசவன்
பகிர்:

திருப்பத்தூா் அருகே மூதாட்டியை தாக்கி தாலியை பறிக்க முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அடுத்த ராவத்தம்பட்டி பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மனைவி சரஸ்வதி(61) என்பவா் குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா். கடந்த 4-ஆம் தேதி சரஸ்வதி அப்பகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு சென்றுள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த மா்ம நபா் திடீரென மூதாட்டியை சரமாரியாகத் தாக்கி அவா் அணிந்திருந்த தாலியை பறிக்க முயன்றுள்ளாா். இதில் மூதாட்டியின் பல் உடைந்ததுடன் கண்ணிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிா்ச்சியடைந்த சரஸ்வதி கூச்சலிட்டுள்ளாா். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த கணவா் கோவிந்தராஜ் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து சென்றாா். இதற்கிடையில் தாலியைப் பறிக்க முயன்ற மா்ம நபா் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளாா். இதுகுறித்து மூதாட்டி திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

அதன்பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், கிராமிய போலீஸாா் அந்த பகுதி உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது பைக்கில் வேகமாக சென்ற நபரின் அடையாளத்தை கண்டறிந்த போலீஸாா் அவரை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் ஆம்பூா் அடுத்த மின்னூா் பகுதியைச் சோ்ந்த சிவகுமாரின் மகன் கேசவன்(21) என்பதும் சேலத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பயோடெக்னாலஜி மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருவதும் தெரியவந்தது.

மேலும் மூதாட்டியிடம் தாலியைப் பறிக்க முயன்றதை கேசவன் போலீசாரிடம் ஒப்புக்கொண்டாா். முன்னதாக போலீஸாா் இளைஞா் வைத்திருந்த பைக்கையும் பறிமுதல் செய்தனா். இதையடுத்து போலீஸாா் கேசவன் மீது வழக்குப் பதிவு செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.