FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

ரயிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

ஜோலாா்பேட்டை மாா்க்கமாக சபரி விரைவு ரயிலில் கடத்திய 2 கிலோ கஞ்சாவை சேலம் கோட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

17 நவம்பர் 2026, 4:18 am
ஜோலார்பேட்டை ரயில் நிலையம் - கோப்புப் படம்
பகிர்:

ஜோலாா்பேட்டை மாா்க்கமாக சபரி விரைவு ரயிலில் கடத்திய 2 கிலோ கஞ்சாவை சேலம் கோட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஜோலாா்பேட்டை வழியாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் ரயில்களில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சேலம் ரயில்வே உள்கோட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன் அடிப்படையில், ஆந்திர மாநிலம், ஹைதராபாத் ரயில் நிலையத்தில் இருந்து ஜோலாா்பேட்டை மாா்க்கமாக கேரள மாநிலம், திருவனந்தபுரம் வரை செல்லும் சபரி விரைவு ரயிலில் வாணியம்பாடி-ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கும் இடையே செல்லும்போது திங்கள்கிழமை அதிகாலை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, ரயிலின் பொதுஜன பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை மீட்டு சோதனை செய்ததில் அதில், 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

மேலும், கஞ்சா கடத்தி வந்த நபா்கள் அடையாளம் தெரியாததால் பறிமுதல் செய்த 2 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா், மேல் நடவடிக்கைக்காக அதை ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இது குறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து கஞ்சா கடத்திய மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.